UPDATED : ஏப் 03, 2026 06:39 PM
ADDED : ஏப் 03, 2026 06:41 PM
திருப்பூர்:
'தினமலர்' கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி ஏப்., 4ம் தேதி துவங்கி, ஏப்ரல் 5ம் தேதி மாலை நிறைவடைகிறது.
'தினமலர்' நாளிதழ், கிருஷ்ணா கல்வி நிறுவனம், அம்ரிதா விஸ்வ வித்யாலயா நிறுவனங்கள் சார்பில், தினமலர் கல்வி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி, நாளை (4ம் தேதி) திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் மண்டபத்தில் துவங்குகிறது. காலை 10:00 மணி முதல் மாலை 06:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.
பிளஸ் 2க்கு பின் உயர்கல்வியை தேர்வு செய்வது எப்படி, புத்தம் புதிய படிப்புகள் எவை, காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு, 'நீட்' தேர்வு விளக்கம், மருத்துவம், இன்ஜி., தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.,), சமூக ஊடகம், பிக்டேட்டா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஆக்மென்ட் ரியாலிட்டி, ரோபாட்டிக்ஸ், சட்டம், அறிவியல் படிப்புகள் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் விளக்கம் தருகின்றனர்.
'எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில்நுட்பங்கள்' எனும் தலைப்பில் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ்காந்தி, 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' எனும் தலைப்பில் இந்திய பாதுகாப்புத்துறை ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, 'நீட், ஜே.இ.இ., தேர்வு வாய்ப்புகள்' குறித்து கல்வியாளர் அஸ்வின் உள்ளிட்டோர் பேசுகின்றனர்; மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க உள்ளனர்.
படிக்கும் போதே வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் துவங்கி, உயர்கல்வி குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் விடைகாண முடியும். வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க, இலவச முன்பதிவுக்கு 95667 77833 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு RGN என்ற டைப் செய்து அனுப்பலாம்.
பரிசு பெறலாம்
வழிகாட்டி கருத்தரங்கின் இடையிடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு 'லேப்டாப்', 'டேப்லெட்', வாட்ச் பரிசு காத்திருக்கிறது. மாணவர்களும், பெற்றோர்களும் பிளஸ் 2க்கு பின் எந்த உயர்கல்வியை தேர்வு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். விடையளித்து பரிசை பெற்றுச் செல்லலாம்.
