பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம்? துவங்குகிறது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம்? துவங்குகிறது தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
UPDATED : ஏப் 02, 2026 04:41 PM
ADDED : ஏப் 02, 2026 04:43 PM
திருப்பூர்:
திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி ஏப்ரல் 4ம் தேதி துவங்குகிறது; இரு நாட்கள் நடக்கிறது.
'தினமலர்' நாளிதழ் சார்பில், கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி, வரும், 4 மற்றும் 5ம் தேதி திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் மண்டபத்தில் நடக்கிறது. இதில், பிளஸ் 2வுக்கு என்ன படிக்கலாம், எதில் சிறந்த எதிர்காலம் உள்ளது, புத்தும் புது படிப்புகள், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்.
ஆக்மெண்ட் ரியாலிட்டி, சோஷியல் மீடியா, டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிக்டேட்டா, ரோபாட்டிக்ஸ், சட்டம், அறிவியல், கலைப்பிரிவு உள்ளிட்ட படிப்புகள், அவற்றில் உள்ள வாய்ப்புகள் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள், பேராசிரியர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
வேலைவாய்ப்பை எளிதாக்கும் டாப் துறைகள், படிக்கும் போது வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், அரசு வேலைவாய்ப்புகள், நீட் தேர்வு குறித்து பிரத்யேக விளக்கம் அளிக்கப்படுகிறது. 'ஏ.ஐ.,' யுகத்தில் உங்கள் கனவுகளை நனவாக்கும் சரியான கல்வி மேடை இந்த நிகழ்ச்சி பெற்றோருக்கும், மாணவருக்கும் அமையும்.
கேள்வி கேட்கலாம்
நிகழ்ச்சியில் 'எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில்நுட்பங்கள்' எனும் தலைப்பில் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' எனும் தலைப்பில் இந்திய பாதுகாப்புத்துறை ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, 'நீட், ஜே.இ.இ. தேர்வு வாய்ப்புகள்' குறித்து கல்வியாளர் அஸ்வின் பேசுகின்றனர்; மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க உள்ளனர்.
வழிகாட்டி நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனம் இணைந்து வழங்குகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அம்ரிதா விஸ்வ வித்யாலயா நிறுவனங்கள் உடன் கரம் கோர்க்கின்றன.
திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் மண்டபத்தில் நடக்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க, இலவச முன்பதிவுக்கு 95667 77833 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு RGN என்ற டைப் செய்து அனுப்பலாம்.
பரிசுகள் உண்டு
வழிகாட்டி கருத்தரங்கின் இடையிடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் பரிசாக வழங்கப்படும். வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 06:30 மணி வரை நடைபெறும். நிகழ்வில் பங்கேற்க, அனுமதி இலவசம். உயர்கல்வி குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் நேரில் விடை காண உடனே பதிவு செய்யுங்கள்; பங்கேற்று பயன் பெறுங்கள்.
