sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது

/

தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது

தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது

தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது


UPDATED : ஜன 26, 2025 12:00 AM

ADDED : ஜன 26, 2025 10:52 AM

Google News

UPDATED : ஜன 26, 2025 12:00 AM ADDED : ஜன 26, 2025 10:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
தினமலர் நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, பத்ம ஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்திரிகை தொடர்பான பல்வேறு தேசிய அமைப்புகளில், உயர் பதவி வகித்துள்ள லட்சுமிபதி, மதுரையில் கல்வி நிலையங்களை துவங்கி, கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்வி கற்க உதவினார்.

மூன்றாவது மகன்


மருத்துவம் தொடர்பான, தி ஆன்டிசெப்டிக் மற்றும், ஹெல்த் கடல் சார்ந்த சாகர் சந்தேஷ் (இ - பேப்பர்) ஆகிய பத்திரிகைகளையும் நடத்தி வரும் லட்சுமிபதி, பத்திரிகை துறையிலும், கல்வி துறையிலும் ஆற்றிவரும் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமலர் நாளிதழின் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் மூன்றாவது மகன் ஆர்.லட்சுமிபதி; 1935ல் பிறந்தார். திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (வேதியியல்) பட்டம் பெற்ற பின், பிரிட்டனில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் செய்தித்தாள் மேலாண்மை பயின்றார்.

கடந்த 1956ல் தினமலர் நாளிதழில் பொறுப்பு ஏற்றார். துவக்கத்தில் விளம்பரப் பிரிவில் பணியாற்றினார். இதழியல் அனுபவம், மேலாண்மை திறனால், அதிக விற்பனையாகும் நாளிதழாக தினமலர் நாளிதழை உயர்த்தினார்.

தலைவர் பொறுப்பு


பி.டி.ஐ., செய்தி நிறுவனம், இந்திய நாளிதழ் சங்கமான ஐ.என்.எஸ்., இந்திய மொழி நாளிதழ் கூட்டமைப்பான, ஐ.எல்.என்.ஏ., மற்றும் நாளிதழ் விற்பனை தணிக்கை அமைப்பான, ஏ.பி.சி., ஆகியவற்றின் தலைவர் பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினராகவும் இருந்தார்.

சுப்புலட்சுமி லட்சுமிபதி அறக்கட்டளையை நிறுவி, எஸ்.எல்.சி.எஸ்., அறிவியல் கல்லுாரி, கே.ஆர்.எஸ்., பள்ளி, ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் கல்லுாரி போன்றவற்றை துவக்கினார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகமும், கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் லட்சுமிபதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. மதுரை காமராஜ் பல்கலைக்கழக சிண்டிகேட்டில் கவர்னரின் பிரதிநிதியாக பணியாற்றினார்.

விருதின் விபரம்


இந்தியாவின் நான்காவது உயரிய விருது பத்ம ஸ்ரீ; 1954ல் துவங்கப்பட்டது. கல்வி, வணிகம், கலை, மருத்துவம், விளையாட்டு, சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரைகளை பத்ம விருது கமிட்டி பரிசீலித்து, பிரதமர், ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் அறிவிக்கப்பட்டு ஏப்ரலில் வழங்கப்படும்.

ஜனாதிபதி, பிரதமருக்கு நன்றி



நாட்டிற்கும், சமூகத்திற்கும் சேவையாற்றி வருவதற்காக, டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, 'பத்ம ஸ்ரீ' விருது அறிவித்து கவுரவித்ததற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும், பிரதமர் மோடிக்கும், தினமலர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.






      Dinamalar
      Follow us