sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி பொள்ளாச்சியில் வரும் 6ம் தேதி நடக்கிறது

தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி பொள்ளாச்சியில் வரும் 6ம் தேதி நடக்கிறது

தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி பொள்ளாச்சியில் வரும் 6ம் தேதி நடக்கிறது


UPDATED : ஜூலை 03, 2024 12:00 AM

ADDED : ஜூலை 03, 2024 09:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2024 12:00 AM ADDED : ஜூலை 03, 2024 09:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழ் சார்பில், பொள்ளாச்சி மாதவா இன் ேஹாட்டலில் வரும் 6ம் தேதி நடக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில் ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து, தினமலர் நாளிதழ் வழிகாட்ட உள்ளது.

இதற்காக, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து, தினமலர் நாளிதழ் டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி-2024 என்ற நிகழ்ச்சியை, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்த உள்ளது.

பொள்ளாச்சியில் கோவை ரோட்டிலுள்ள மாதவா இன் ேஹாட்டலில், வரும் 6ம் தேதி மாலை, 3:00 முதல், 6:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர், மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்க உள்ளனர்.

ஆன்லைன் கவுன்சிலிங்கின் விதிமுறைகள், சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல், கட் ஆப் மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை, விருப்பப் பாட பிரிவை தேர்வு செய்யும் முறை, வேலை வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பாட பிரிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு, நிபுணர்களிடம் விளக்கம் பெறலாம்.

இந்தாண்டு எந்த படிப்பிற்கு மவுசு அதிகம், என்ன படிப்பிற்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு உள்ள வாய்ப்புகள், சிறந்த கல்லுாரியைத் தேர்வு செய்யும் வழிமுறைகள்... என, அனைத்து சந்தேகங்களுக்கும் மாணவர்கள், பெற்றோர் விடை பெறலாம். அனுமதி இலவசம்.

இந்த நிகழ்ச்சியை, கோவை ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மற்றும் கற்பகம் கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us