sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இன்ஜினியரிங் கவுன்சிலிங் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது தினமலர்

/

இன்ஜினியரிங் கவுன்சிலிங் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது தினமலர்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது தினமலர்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது தினமலர்


UPDATED : ஜூன் 12, 2025 12:00 AM

ADDED : ஜூன் 12, 2025 07:42 PM

Google News

UPDATED : ஜூன் 12, 2025 12:00 AM ADDED : ஜூன் 12, 2025 07:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
இன்ஜினியரிங் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் குறித்து, ஆலோசனைகளை வழங்கும் வகையில், தினமலர் நாளிதழ் சார்பில், சென்னையில் ஜூன் 14ல் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு, அரசு உதவிபெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள், ஆன்லைன் கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன. இதை, டி.என்.இ.ஏ., எனும் இணையதளத்தின் வாயிலாக, தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது.

ஆலோசனை


இந்நிலையில், பி.இ., பி.டெக்., படிக்க விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, கவுன்சிலிங் குறித்து வழிகாட்டும் வகையில், தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துடன் இணைந்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை, வரும் 14ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, சென்னை தி.நகர், வாணி மகாலில் நடத்த உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், எந்த கட் ஆப் மதிப்பெண்ணிற்கு எந்த கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது; நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன; 'கோர்' இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்; சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து, கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின் ஆலோசனைகளை வழங்குகிறார்.

மேலும், ஆன்லைன் கவுன்சிலிங் அணுகுமுறைகள்; கவுன்சிலிங்கின்போது, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்; கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் விதம்; வேலை வாய்ப்பு மிகுந்த படிப்புகள் என்னென்ன என்பவை குறித்த ஆலோசனைகளையும் வழங்குகிறார்.

அதேபோல், ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள்; சரியாக சாய்ஸ் பில்லிங் பதிவிடுவதற்கான வழிமுறைகள்; புரொவிசனல் அலாட்மென்ட் பெறுதல்.

நேரடியாக விளக்கம்


கவுன்சிலிங் முறையில் இந்தாண்டு செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை பிரிவு செயலர் டி.புருஷோத்தமன் நேரடியாக விளக்கம் அளிக்கிறார்.

இதே நிகழ்ச்சி, 14ம் தேதி பிற்பகல் 3:00 மணி முதல் 6:00 மணி வரை, குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவன வளாகத்திலும் நடக்க உள்ளது. நிகழ்ச்சிகளில், மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் பங்கேற்கலாம்.

9566777833 என்ற வாட்ஸாப் எண்ணுக்கு RGN என டைப் செய்து அனுப்பினால் ஒரு விண்ணப்ப படிவம் வரும். அதை நிரப்பி அனுப்பி, நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் .







      Dinamalar
      Follow us