sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தினமலர் நீட் மாதிரி நுழைவு தேர்வு

/

தினமலர் நீட் மாதிரி நுழைவு தேர்வு

தினமலர் நீட் மாதிரி நுழைவு தேர்வு

தினமலர் நீட் மாதிரி நுழைவு தேர்வு


UPDATED : ஏப் 21, 2025 12:00 AM

ADDED : ஏப் 21, 2025 11:12 AM

Google News

UPDATED : ஏப் 21, 2025 12:00 AM ADDED : ஏப் 21, 2025 11:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
தினமலர் நடத்திய மாதிரி நீட் தேர்வை ஆர்வமுடன் மாணவர்கள் எழுதினார்கள்.

இலவச கையேடு


நீட் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிய உணவு, ஸ்பெக்ட்ரா நிறுவனத்தின் நீட் தேர்வினை எதிர்கொள்ளுவதற்கான பார்முலா, சமன்பாடுகள் அடங்கிய கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.

ஆல்பா மெட்ரிக் பள்ளி


மாணவர்கள் எளிதாக நீட் தேர்வு எழுத ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் தேவையான உதவிகளை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். மாதிரி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இனிப்புடன் கூடிய ஆல்பா இன்ஜினியரிங் கல்லுாரி சேர்க்கை குறித்த தகவல் குறிப்பேடு விநியோகிக்கப்பட்டது.

கடைசி நேர பதட்டம் வேண்டாமே


மாதிரி நீட் தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு, 9.00 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருந்தது. இதை பெரும்பாலான மாணவர்கள் கடைபிடித்து நேரத்திற்கு மையத்திற்கு வந்திருந்தனர்.சில மாணவர்கள் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடி வந்து தேர்வு எழுத வந்தனர். மாதிரி நுழைவுத்தேர்வு என்பதாலும், மாணவர்கள் இத்தேர்வு மூலம் பயிற்சி பெற வேண்டுமென்பதற்காகவும், தேர்வெழுத அனுமதிக்கப்பட்டது.ஆனால் இதே தவறை, மே 4 ம் தேதி நடக்கும் நுழைவுத்தேர்விலும் செய்துவிட வேண்டாம். உரிய காலத்திற்குள் தேர்வறையில் இருந்தால் தான், இறுதி நேர பயம், படபடப்பில் இருந்து விடுபட்டு ரிலாக்ஸாக தேர்வெழுத முடியும் நீட் தேர்வு எத்தனை மணிக்கு துவங்குகிறது என்பதை கணக்கிட்டு, ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம் மாணவ மாணவிகளே...

நீட் தேர்விற்கு இதை கொண்டு போகாதீங்க


நீட் தேர்வு மையத்திற்குள் மாணவ மாணவிகள் வாட்ச் அணிந்து வரக் கூடாது. மொபைல் போன் எடுத்து வரக் கூடாது. வளையல், கம்பல், மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்கள், ேஹர்பின், ேஹர் கிளிப் அணிந்து வர தடையுள்ளது. இதுதொடர்பாக தினமலரில் ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் சில மாணவிகள், அதே தவறை செய்தனர். இவர்களுக்கு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன. தொடர்ந்து மாணவிகள் ேஹர்பின், ேஹர் கிளிப் ஆகியவற்றை கழற்றி வைத்துவிட்டு, நுழைவு தேர்வை எழுத சென்றனர். மொபைல் போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒப்படைத்து விட்டு மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்குள் சென்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகொடுத்த தினமலர் நீட் மாதிரி நுழைவு தேர்வு


புதுச்சேரி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வித் துறை சார்பில் நீட் நுழைவு தேர்வினை எழுத பள்ளி கல்வித் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வமாக எழுதினர். தினமலர் நீட் தேர்வு மூலம் தன்னம்பிக்கை பெற்றதாக தெரிவித்தனர்.

முதலில் வந்த மாணவி



நீட் மாதிரி நுழைவு காலை 10:00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட் இருந்தாலும், கரையாம்புத்துார் மேட்டு தெருவை சேர்ந்த மாணவி சுப்பிரியா தேர்வு மையத்திற்கு முதல் ஆளாக காலை 8.5 மணிக்கே வந்திருந்தார். ஆல்பா மெட்ரிக்குலேஷன் பள்ளியை சேர்ந்த அவர், தேர்வு துவங்கும் வரை ரிலாக்சாக பாடங்களை மீள்பார்வை செய்துக்கொண்டு இருந்தார். மாணவி சுப்பிரியா கூறும்போது, நீட் தேர்விற்கு காலதாமதமாக வந்தால் கடைசிநேரத்தில் தேவையற்ற டென்ஷன் தான் ஏற்படும். அதனால் தான் முன் கூட்டியே திட்டமிட்டு தேர்வறைக்கு வந்தேன் என்று கூலாக தெரிவித்தார்.

நீட் தேர்வு முடியும் வரை உதவி: ஸ்பெக்ட்ரா நிறுவனம் அறிவிப்பு


ஸ்பெக்ட்ரா மேலாண் இயக்குநர் கார்த்திகேயன் கூறும்போது, இந்த மாதிரி நுழைவு தேர்வினை ஆயிரம் மாணவர்கள் எதிர்கொண்டு எழுதியுள்ளனர். இம்மாணவர்கள் அனைவரும் வாட்ஸ் ஆப்பில் ஒன்றிணைக்கப்படுவர். அவர்களுக்கு மே -4ம் தேதி நீட் நுழைவு தேர்வு முடியும் வரை உதவிகளை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அனைத்து நீட் டெஸ்ட் வினாக்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான நுணுக்ககுறிப்புகள் அனைத்தும் இலவசமாகவே விநியோகிக்கப்படும். தினமலர் நீட் நுழைவு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த கவுன்சிலிங் உதவிகள் தேவைப்பட்டாலும் 70945-77772 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us