UPDATED : ஏப் 28, 2025 12:00 AM
ADDED : ஏப் 28, 2025 10:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் :
தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்பெக்ட்ரா நிறுவனம் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வில், மாணவி ஜனனி முதலிடம் பிடித்து அசத்தினார்.
தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்பெக்ட்ரா நிறுவனம் இணைந்து நேற்று கடலுாரில் நடத்திய நீட் மாதிரி தேர்வினை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். ஓ.எம்.ஆர்., ஷீட்டில் விடையை வட்டமிட்டனர். தொடர்ந்து மாணவர்களின் ஓ.எம்.ஆர்.,விடைத்தாள் திருத்தப்பட்டு இரவு 9 :00 மணிக்கு ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில், மாணவி ஜனனி 720 மதிப்பெண்ணிற்கு 636 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார்.
அவர் இயற்பியலில் 124, வேதியியலில் 152, உயிரியலில் 360 மதிப்பெண் எடுத்தார். மாணவி யுவைனி 510மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம், மாணவி மார்கரட் 501மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம் பிடித்து அசத்தினர்.

