கள்ளக்குறிச்சியில் வரும் 28ம் தேதி தினமலர் நீட் மாதிரி நுழைவு
கள்ளக்குறிச்சியில் வரும் 28ம் தேதி தினமலர் நீட் மாதிரி நுழைவு
UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 09:36 AM

கள்ளக்குறிச்சி:
தினமலர் நாளிதழ், ஏ.கே.டி., ஐ.ஐ.டி., நீட் அகாடமி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும், நீட் மாதிரி தேர்வு, வரும் 28ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடக்கிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, மே 5 ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுத தயாராகி உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் நீட் நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட தினமலர் நாளிதழ், ஏ.கே.டி., ஐ.ஐ.டி., நீட் அகாடமி நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாதிரி தேர்வு வரும் 28ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1.20 மணி வரை, கள்ளக்குறிச்சி நீலமங்கலம் ஏ.கே.டி.,மெட்ரிக்/சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாதிரி நுழைவு தேர்வில் பதிவு செய்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.