தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி வென்ற மாணவர்கள் பேட்டி
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி வென்ற மாணவர்கள் பேட்டி
UPDATED : செப் 03, 2026 06:45 PM
ADDED : செப் 03, 2026 06:46 PM
விழுப்புரம்:
தினமலர் பட்டம் இதழ் வினாடி வினா போட்டியில், முதல் இரு இடங்களை பிடித்த மாணவர்கள் பேட்டி
பட்டம் இதழால் உத்வேகம்
எங்கள் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழை தினந்தோறும் தந்து எங்களை படிக்க செய்தனர். இந்த பள்ளியில், 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயில்கிறோம்.
எனக்கு பட்டம் இதழில் விளையாட்டு பகுதியும், யுனிவர்ஸ் பகுதியும் மிகவும் பிடிக்கும். நான் முதலிடத்தை பிடிக்க காரணம் பட்டம் இதழ் மூலம் எனக்கு ஏற்பட்ட உத்வேகம் தான்.
இந்த பரிசை வென்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இறுதி போட்டியிலும் எனது திறமையை வெளிப்படுத்தி கண்டிப்பாக சாதிப்பேன். எனக்கு சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என்பது எதிர்கால இலக்காக உள்ளது.
- விஜயஸ்ரீ, 8ம் வகுப்பு.
வாசிப்பு திறன் கூடுகிறது
போட்டி தேர்வில் சுலபமாக பதிலளிக்கும் வினாக்களை 'தினமலர் - பட்டம்' இதழ் பயில்வதன் மூலம் பெற முடிகிறது. இதன் மூலம் தினந்தோறும் வாசிப்பு திறனும் எங்களுக்கு கூடுகிறது.
இந்த பட்டம் இதழால் தற்போது நாங்கள் கலெக்டரிடம் பரிசு பெறும் இடத்திற்கு வளர்ந்துள்ளோம். இந்த இதழில் எனக்கு விளையாட்டு பகுதி ரொம்பவே புடிக்கும். ஆசிரியர்களின் போதனையோடு, பட்டம் இதழும் எனக்கு திறமையை வளர்த்து கொள்ள பெரிதும் உதவியது.
- திவ்யஸ்ரீ, 8ம் வகுப்பு.
பயனுள்ள தகவல் தரும் இதழ்
'தினமலர் - பட்டம்' இதழ் பயில்வதன் மூலம் எதிர்கால இலக்கை நாங்கள் அடைய உதவுகிறது. எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்ற இலக்கு உள்ளது.
இதற்கு முக்கியமாக, நான் அரசு போட்டி தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதற்கான முதல் படியை பட்டம் இதழ் எனக்கு அளித்து உதவியுள்ளது. இந்த பட்டம் இதழ் மாணவர்களுக்கு பல பயனுள்ள தகவல்களை தருகிறது.
- ஹரிணி, 8ம் வகுப்பு.
போட்டி தேர்வு எதிர்கொள்ளலாம்
நான் 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டியில், 2வது இடத்தை பிடிக்க காரணம், எங்கள் பள்ளியின் ஆசிரியர்களும், அவர்கள் வழங்கிய பட்டம் இதழும் தான்.
எனக்கு மிகவும் மகிழ்வான தருணமாக இது உள்ளது. பட்டம் இதழை மாணவர்கள் பயின்றால் இந்த போட்டியில் மட்டுமின்றி, போட்டி தேர்வுகளுக்கான வினாக்களும் இதில் அடங்கியுள்ளது. இதை பயின்றால் ஒரளவுக்கு சுலபமாக போட்டி தேர்வையும் எதிர்கொள்ளலாம்.
- யாஷிகா, 7ம் வகுப்பு.
