தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி துவக்கம்

தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி துவக்கம்

தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி துவக்கம்


UPDATED : அக் 10, 2026 10:08 AM

ADDED : அக் 10, 2026 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 10:08 AM ADDED : அக் 10, 2026 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' எனும் மெகா வினாடி வினா போட்டி, கோவைப்புதுார் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.

மாணவர்களின் கற்றல் திறன், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 2018ம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான போட்டியின் துவக்க நிகழ்ச்சி, ஆஸ்ரம் பள்ளியில் நடந்தது. சத்யா ஏஜன்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் ஆகிய நிறுவனங்கள் பரிசுப் பொருட்களை வழங்கும் பங்களிப்பாளர்களாக இணைந்துள்ளன.

மூன்று சுற்றுகள்


தகுதிச்சுற்றில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் 500 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, மாணவர்கள் ஆர்வத்துடன் பதிலளித்தனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள், எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

மூன்று சுற்றுகளாக நடந்த இறுதிப் போட்டியில், 'ஏ' அணியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள் தருண், யஸ்வந்த் ராஜ் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

இறுதிப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள், சான்றிதழ்களை பள்ளித் தாளாளர் தேவேந்திரன், நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்திரன், முதல்வர் சரண்யா ஆகியோர் வழங்கினர். தமிழாசிரியர் கிறிஸ்டி சிசிலி, கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா ஆகியோர் வினாடி வினா போட்டியை ஒருங்கிணைத்தனர்.

3 மாவட்ட பள்ளிகள்


கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்துள்ள 160க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தேர்வு செய்யப்படும். அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணிகள் பங்கேற்கும் இறுதிப் போட்டி ஒரே இடத்தில் நடத்தப்படும். வெற்றி பெறும் அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

வாசிப்புக்கு தனி நேரம்


கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் தினமலர் 'பட்டம்' இதழை வழங்கி வருகிறோம். இதன் மூலம் மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறனும் பொது அறிவும் மேம்படுகின்றன.

பட்டம் இதழ் நடத்தும் போட்டிகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இதழ் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதாக பெற்றோர்களும் பாராட்டுகின்றனர்.

வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் வகையில், நூலக நேரத்தைப் போலவே செய்தித்தாள் வாசிப்புக்கும் பட்டம் இதழ் படிப்பதற்கும் தனியாக வகுப்பு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

- கவுரி உதயேந்திரன், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.

விரிவாகும் அறிவு


தினமலர் பட்டம் இதழைப் படிப்பதால், பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட பல புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அறிவியல், வரலாறு, பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வெளியாகும் தகவல்கள் எங்கள் அறிவை விரிவுபடுத்துகின்றன. வினாடி வினா பகுதிகள் சிந்திக்கும் திறனை வளர்ப்பதுடன், வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் அதிகரிக்கின்றன.

- மாணவர், தருண்.

வளரும் தன்னம்பிக்கை


தினமலர் 'பட்டம்' இதழைத் தொடர்ந்து படிப்பதால், பொது அறிவு அதிகரிப்பதுடன், பல்வேறு துறைகள் குறித்த புரிதலும் மேம்படுகிறது. உலக நிகழ்வுகள், நடப்பு செய்திகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதால் எங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. வினாடி வினா போட்டிகளில் எளிதாக பதில் அளிப்பதுடன், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

- மாணவர், யஸ்வந்த் ராஜ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us