தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ 'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி வினா போட்டி பரிசளிப்பு

'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி வினா போட்டி பரிசளிப்பு

'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் வினாடி வினா போட்டி பரிசளிப்பு


UPDATED : அக் 25, 2026 01:47 PM

ADDED : அக் 25, 2026 01:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 01:47 PM ADDED : அக் 25, 2026 01:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தேங்காய்திட்டு ஆச்சார்யா பால சிக்ஷா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், தினமலர் - பட்டம் இதழ் சார்பில், மாணவர்களுக்கான மெகா வினாடி வினா போட்டி நடந்தது.

அதன்படி, முதல்நிலை தகுதி சுற்று போட்டியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை பயிலும் 500 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாங்கள் கேட்கப்பட்டு, 20 நிமிடங்கள் தேர்வு நடத்தப்பட்டது. அதில், அதிக மதிப்பெண் அடிப்படையில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

முதல்நிலை தேர்வில் தேர்வு பெற்ற 16 மாணவர்கள், 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி வினா போட்டி மூன்று சுற்றுகளாக நடந்தது. ஒவ்வொரு சுற்றிலும் 8 கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில், 9ம் வகுப்பு மாணவகள் பிரணவ் சண்முகவேல், சுருதி முதலிடமும், மாணவர்கள் விபிஷா, ஹ க்ஷயா ஆகியோர் இரண்டாம் இடமும் பிடித்து, இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியின் முதல்வர் கவிதா தணிகாசலம், துணைத் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் பரிசு வழங்கினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us