தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிந்தனைக்கு விருந்து… ஆற்றலுக்கு பரிசு! 'பட்டம்' வினாடி வினாவில் மாணவியர் அபாரம்

சிந்தனைக்கு விருந்து… ஆற்றலுக்கு பரிசு! 'பட்டம்' வினாடி வினாவில் மாணவியர் அபாரம்

சிந்தனைக்கு விருந்து… ஆற்றலுக்கு பரிசு! 'பட்டம்' வினாடி வினாவில் மாணவியர் அபாரம்


UPDATED : நவ 07, 2026 01:37 AM

ADDED : நவ 07, 2026 01:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 01:37 AM ADDED : நவ 07, 2026 01:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசை வெல்' மெகா வினாடி வினா போட்டி, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் நடந்து வருகிறது. 150க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தெற்கு ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போட்டி நடந்தது. இதில் 110 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 பேர், எட்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏ அணியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அனிஷா, எட்டாம் வகுப்பு மாணவி அமுதா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளித் தாளாளரும், தெற்கு ரோட்டரி கல்வி அறக்கட்டளை செயலாளருமான ஜெயபாலன் பதக்கம், சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் நிறுவனங்கள் பரிசுப் பொருட்களை வழங்கின.

தனித்திறன் வளர்க்கும்

'தினமலர்' நாளிதழ் வழங்கும் பட்டம் இதழ் மாணவர்களின் பொது அறிவு, வாசிப்புத் திறன் மற்றும் தனித்திறமைகளை வளர்க்க உதவுகிறது. புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்த உதவும் பல செய்திகள் 'பட்டம்' இதழில் வெளியாவது தனிச்சிறப்பு.

- ஜெயபாலன், பள்ளித் தாளாளர்.

மொழியறிவு பெருகும்

'பட்டம்' இதழ் எளிமையாகவும் வேகமாகவும் தமிழ் படிக்க உதவுகிறது. அறிவியல் தகவல்கள், புதிய விஷயங்களை அறிந்துகொள்ளவும் மொழியறிவை வளர்க்கவும் உதவுகிறது.

- அனிஷா, மாணவி.

விஷயங்கள் அறியலாம்

உலகில் தெரியாத பல விஷயங்களை பட்டம் இதழ் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. விளையாட்டு உள்ளிட்ட நடப்பு நிகழ்வுகளையும் 'பட்டம்' இதழில் வெளியாகும் செய்திகளை கொண்டு தெரிந்துகொள்ள உதவுகிறது.

- அமுதா, மாணவி.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us