தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'பட்டம்' வாசித்தனர்... பதில் கூறி பரிசு வென்றனர்! வினாடி வினா போட்டியில் கலக்கிய மாணவர்கள்

'பட்டம்' வாசித்தனர்... பதில் கூறி பரிசு வென்றனர்! வினாடி வினா போட்டியில் கலக்கிய மாணவர்கள்

'பட்டம்' வாசித்தனர்... பதில் கூறி பரிசு வென்றனர்! வினாடி வினா போட்டியில் கலக்கிய மாணவர்கள்


UPDATED : நவ 12, 2026 02:27 PM

ADDED : நவ 12, 2026 02:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 02:27 PM ADDED : நவ 12, 2026 02:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:
'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற மெகா வினாடி- வினா போட்டி, பல்லடம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி மாணவர்களின் கல்வி, சிந்தனைத் திறனை மேம்படுத்துவதுடன், வாசிப்பு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், பட்டம் மாணவர் பதிப்பு வெளியிடப்படுகிறது. ஆர்வத்துடன் வாசிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க, வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுகின்றன. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 160க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், போட்டியில் பங்கேற்று, பொது அறிவுத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட அளவில், பள்ளிகள் அளவிலான அரையிறுதி சுற்றுக்கான போட்டிகள் நடந்து வருகிறது.

அவ்வகயைில், இன்று பல்லடம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'பட்டம்' வினாடி - வினா போட்டி நடைபெற்றது. இதில், 50 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, மூன்று சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

'ஏ' அணியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் செல்வா ஜான் பிளஸ்ஸிங் முதலிடமும், விகாஷ் இரண்டாம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் தர்மராஜ், நிர்வாக அறங்காவலர் புவன் சக்கரவர்த்தி ஆகியோர் பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினர். பள்ளி முதல்வர் மகேந்திரன், ஆசிரியை அம்புஜம் உடனிருந்தனர்.

சிறந்த வழிகாட்டி

மாணவர்கள் கற்பதற்கான வாய்ப்புகள் இன்று அதிகரித்துள்ளன. பொது அறிவு, அறிவியல், விளையாட்டு என பல்வேறு தகவல்களை வழங்கும், தினமலர் 'பட்டம்' இதழ், மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.

- தர்மராஜ், பள்ளித் தாளாளர்.

சுவாரசிய தகவல்கள்

தினமும் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் எனக்கு உள்ளது. அதிலும், 'தினமலர்' பட்டம் இதழில் வெளியாகும் தகவல்கள் மிகவும் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. மாணவர்களின் முன்னேற்றத்துக்கான இதழ், 'பட்டம்'.

- செல்வா ஜான் பிளஸ்ஸிங், மாணவர்.

விளையாட்டுப்பகுதி சிறப்பு

பள்ளியில் தினமும் 'தினமலர்' நாளிதழ் படிப்பேன். இதன் மூலம் பொது அறிவுத் தகவல்கள் கிடைக்கின்றன. 'பட்டம்' இதழில் வெளியாகும் விளையாட்டுப் பகுதி மிகவும் பிடிக்கும்.

- விகாஷ், மாணவர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us