தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி - வினா போட்டி

'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி - வினா போட்டி

'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி - வினா போட்டி


UPDATED : நவ 13, 2026 01:46 PM

ADDED : நவ 13, 2026 01:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 01:46 PM ADDED : நவ 13, 2026 01:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி - வினா போட்டி, விழுப்புரம் அடுத்த கெடார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இப்போட்டியில், 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். அதில், 16 மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, 3 சுற்றுகளாக போட்டி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் பொன்முடி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.

இதில், 9ம் வகுப்பு மாணவிகள் திவ்யதர்ஷிணி, சத்தியபிரியா ஆகியோர் முதலிடமும், தாமரைச்செல்வி, யுவஸ்ரீ ஆகியோர் இரண்டாமிடமும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பொன்முடி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இப்பள்ளிக்கு விழுப்புரம் சரஸ்வதி கல்விக்குழும தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் சார்பில், 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டு வருகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us