தினமலர் விளையாட்டு வினாடி வினா: மில்லேனியம் பள்ளி முதலிடம்
தினமலர் விளையாட்டு வினாடி வினா: மில்லேனியம் பள்ளி முதலிடம்
UPDATED : நவ 15, 2026 01:17 PM
ADDED : நவ 15, 2026 01:18 PM
கோவை:
தினமலர் நாளிதழ், மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியும் இணைந்து நடத்திய விளையாட்டு வினாடி வினா போட்டியில் பி.எஸ்.எஸ்.பி., மில்லேனியம் பள்ளி முதலிடத்தை பெற்று, ரொக்க பரிசினை வென்றது.
தினமலர் நாளிதழ், கோவை துடியலுாரில் உள்ள மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியும் இணைந்து, பள்ளி அரங்கில் விளையாட்டு வினாடி வினா போட்டியை நடத்தின. குவிஸ் மாஸ்டர் ரங்கராஜன், அசத்தலான கேள்விகளை கேட்டு, மாணவர்களை பரவசப்படுத்தினார். ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்த மாணவர்களுக்கு உடனடி பரிசுகள் வழங்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுக்களாக நடந்த தேர்வில், இறுதி சுற்றுக்கு எட்டு அணிகள் தேர்வாயின.
இறுதி சுற்றில், பி.எஸ்.எஸ்.பி. மில்லேனியம் பள்ளி முதலிடத்தையும், இரண்டாவது பரிசை, புலியகுளம் வித்யா நிகேதன் பள்ளியும், மூன்றாவது பரிசை சுகுணா பிப் பள்ளியும் வென்றன.
யுவபாரதி மெட்ரிக் பள்ளி 4ம் இடத்தையும், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி 5ம் இடத்தையும், கீர்த்திமான் மெட்ரிக் மேல்நிலை பள்ளி 6ம் இடத்தையும் வென்றன. விவேகா சீனியர் செகண்டரி பள்ளி 7ம் இடமும், சின்மயா இன்டர்நேஷனல் இருப்பிட பள்ளி 8ம் இடமும் பெற்றன. போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, ரொக்க பரிசு, ஷீல்டு, டிராபி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
