கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
UPDATED : நவ 21, 2026 04:27 AM
ADDED : நவ 21, 2026 04:28 AM
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் நடத்திய வினாடி வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து 'பதில் சொல், பரிசு வெல்' என்ற மெகா வினாடி வினா போட்டி பள்ளிகளில் நடத்தி வருகிறது. அதன்படி, கடலுார் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், 16 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதிச்சுற்று போட்டி நடந்தது.
இப்போட்டியில் பிளஸ் 2 மாணவி ஜோஜித லட்சுமி, 10ம் வகுப்பு மாணவி வர்ஷா அணி முதலிடமும், பிளஸ் 2 மாணவர் சபரிவாசன், 9ம் வகுப்பு மாணவர் ஸ்ரீபாலாஜி அணி இரண்டாமிடமும் பிடித்தனர். பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா, பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா தலைமை தாங்கி, போட்டியில் வென்ற மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினர்.
மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா, சித்ரா, ஆசிரியர்கள் யுவகாந்தி, சிவப்பிரியா, பெற்றோர் வெங்கடேசன் மற்றும் மாணவர்கள் உடனிருந்தனர். பள்ளி அளவில் வெற்றி பெற்ற இரு அணிகளும் புதுச்சேரியில் நடக்கும் மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.
