தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/த நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி

த நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி

த நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி


UPDATED : நவ 26, 2026 04:23 PM

ADDED : நவ 26, 2026 04:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 04:23 PM ADDED : நவ 26, 2026 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி:
பண்ருட்டி த நியூ ஜான்டூயி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.

புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து 'பதில் சொல்; பரிசு வெல்' என்ற மெகா வினாடி - வினா போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி பண்ருட்டி கஸ்துாரிபாய் தெருவில் உள்ள த நியூ ஜான்டூயி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த வினாடி வினா போட்டியில் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில் 16 பேரை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து அக்குழுக்களுக்குள் தகுதி சுற்று நடந்தது.

போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு, பள்ளி இணை செயலாளர் ஜோஷ்வா துவக்கி வைத்தார். போட்டியின் இறுதியில் 9 ம்வகுப்பு மாணவிகள் லக் ஷஜா, ஸ்ரீஜி அணியினர் முதலிடம் பிடித்தனர். 7ம் வகுப்பு மாணவிகள் நதிராசனா, அனுஷாஸ்ரீ 2ம் இடம் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி இணை செயலாளர் ஜோஷ்வா, முதல்வர் பாலு, பயிற்சி ஆசிரியர் தனநந்தினி, ஞானசிவகாமி, மதிப்பீட்டாளர் பாரதி ஆகியோர் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.

போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள், புதுச்சேரியில் மாநில அளவில் நடக்கும் மெகா வினாடி - வினா போட்டிக்கு தகுதி பெற்றன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us