தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர்., புத்தகத்தை படித்து கண் கலங்கிய தினமலர் வாசகர்

மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர்., புத்தகத்தை படித்து கண் கலங்கிய தினமலர் வாசகர்

மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர்., புத்தகத்தை படித்து கண் கலங்கிய தினமலர் வாசகர்


UPDATED : ஏப் 02, 2026 05:07 PM

ADDED : ஏப் 02, 2026 05:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2026 05:07 PM ADDED : ஏப் 02, 2026 05:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகத்திற்கு வந்த, 'தினமலர்' வாசகர் பாலசுப்பிரமணியன், நுாலகத்தில் இருந்த மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர்., புத்தகத்தை படித்து கண் கலங்கினார்.

பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உளள தினமலர் அலுவலகத்தில், கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் உள்ளது. நுாலகத்திற்கு தினமலர் வாசகர் பாலசுப்பிரமணியன், 74 நேற்று வந்தார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான அவர், மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர்., புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.

மதியம் 01:00 மணி முதல் 04:00 மணி வரை, தொடர்ந்து மூன்று மணி நேரம் புத்தகத்தை படித்தார். எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது செய்த மக்கள் பணிகள், முன்னாள் அமைச்சர் கக்கன் மருத்துவமனையில் இருந்த போது, அவரை சந்தித்தது போன்ற தகவல்களை படித்த போது அவர் கண்கலங்கினார்.

பழைய நினைவு

பின், அவர் கூறியதாவது:



எனது சொந்த ஊர் மதுரை. பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள, மகள் வீட்டிற்கு வந்து உள்ளேன். தினமலர் நாளிதழில் கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் பற்றி படித்தேன். மகளிடம் கூறிவிட்டு புறப்பட்டேன். இங்கு வந்து எம்.ஜி.ஆர்., புத்தகத்தை படித்தது, மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது. புத்தகத்தில் இருந்த ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டிய போது, பழைய நினைவுகள் என் மனதில் கரைபுரண்டு ஓடின.

இன்னும் பலரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் இங்கு உள்ளது. இன்னொரு நாள் கண்டிப்பாக இங்கு வந்து படிக்கிறேன். தமிழர்களுக்காக துவங்கப்பட்ட இந்த நுாலகம் பெரிய வெற்றியை பெறும் என்பதில், துளியும் சந்தேகம் இல்லை. மிகுந்த மகிழ்ச்சியுடனும், பல நினைவுகளுடன் இங்கிருந்து புறப்பட்டு செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சூப்பராக உள்ளது வில்சன் கார்டனில் வசிக்கும் சங்கீதா, அவரது மகன் நந்த கிருஷ்ணா, மகள் நந்த வர்ஷினி ஆகியோரும் நேற்று நுாலகத்திற்கு வந்தனர். ஆங்கில புத்தகங்களை நந்த கிருஷ்ணா, நந்த வர்ஷினி ஆர்வமாக படித்தனர். தமிழ் புத்தகங்களை சங்கீதா வாசித்தார்.

நந்த கிருஷ்ணா கூறுகையில், “எங்கள் வீட்டின் அருகிலும் நுாலகம் உள்ளது. இருந்தாலும் கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தது. நான் பி.யு.சி., 2ம் ஆண்டிற்கு செல்ல உள்ளேன். தங்கை 6ம் வகுப்பு செல்கிறார்.

விடுமுறை என்பதால் அம்மாவுடன் இங்கு வந்தோம். நிறைய புத்தகங்கள் இங்கு உள்ளன. ஆங்கில கதை புத்தகங்கள் சூப்பராக உள்ளன. நீண்ட துாரத்தில் இருந்து வருவோரால், இங்கு அமர்ந்து புத்தகம் படிப்பது சாத்தியம் இல்லை. வீட்டிற்கு புத்தகம் எடுத்து செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்காக மெம்பர்ஷிப் ஏற்படுத்தலாம். கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us