தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கள்ளக்குறிச்சியில் 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்: ஜே.எஸ்., பள்ளியில் குழந்தைகள், பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கள்ளக்குறிச்சியில் 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்: ஜே.எஸ்., பள்ளியில் குழந்தைகள், பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கள்ளக்குறிச்சியில் 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலம்: ஜே.எஸ்., பள்ளியில் குழந்தைகள், பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு


UPDATED : அக் 21, 2026 04:43 PM

ADDED : அக் 21, 2026 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 04:43 PM ADDED : அக் 21, 2026 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் விஜயதசமியையொட்டி 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பு 'பட்டம் இதழ்' மற்றும் ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.

'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பு 'பட்டம் இதழ்' மற்றும் கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து 'அ', 'ஆ', அரிச்சுவடி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடத்தியது.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்று, சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் அரிச்சுவடி எழுதி ஆரம்பித்து மகிழ்ச்சியோடு தங்கள் பிள்ளைகளின் கல்வி பயணத்தை தொடங்கினர்.

நிகழ்ச்சியில், கலெக்டர் பத்மஜா, எஸ்.பி., ஷஹ்னாஸ், சி.இ.ஓ., கார்த்திகா, பள்ளி தாளாளர் செந்தில்குமார், அரசு தரப்பு வழக்கறிஞர் தேவசந்திரன், தாசில்தார் கமலக்கண்ணன், பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, பள்ளி நிர்வாகி சரவணன், ஆடிட்டர் லோகேஸ்வரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் அருணா, துணை முதல்வர் பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முன்னதாக காலை 8:30 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஜே.எஸ்., பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று, குழந்தைகளை தங்களது மடியில் அமர்த்தி விரலை பிடித்து நெல்லில் 'அ'னா 'ஆ'வன்னா எழுதி குழந்தைகளின் கல்வி பயணத்தை துவக்கி வைத்தனர்.

விஜயதசமி நன்னாளில் வாழ்வில் வெற்றி பெற்ற சிறப்பு விருந்தினர்களின் மடியில் அமர வைத்து, அரிச்சுவடி எழுதி குழந்தைகளின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்து பெற்ற நிகழ்வு பங்கேற்ற பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியில், பங்கேற்ற குழந்தைகள், நிகழ்ச்சி அரங்கில் அமைக்கப்பட்டிருந்த பலுான் வீடு, மிக்கி மவுஸ் வேடமணிந்த நபர்களுடன் பெற்றோர்களுடன் விளையாடி மகிழ்ந்தனர்.

மேலும், 'ஏ.ஐ.,' ரோபோடிக்ஸ் ஸ்டாலில் காட்சிப்படுத்தப்பட்ட ஜே.எஸ்., பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பெற்றோர்கள், குழந்தைகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

அதே போல் முதன் முறையாக கற்பித்தல் முறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் மெய் நிகர் எதார்த்தம் எனப்படும் 'விர்சுவல் ரியாலிட்டி'(வி.ஆர்.லேப்) ஹெட்செட்டை குழந்தைகளுக்கு அணிவித்து எல்.இ.டி., திரையில் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அரிச்சுவடி எழுதிய குழந்தைகளுக்கு அரங்கிலேயே ஸ்கூல் பேக், பென்சில், ஷார்ப்பனர், ஸ்கேல், கிரையான்ஸ், நோட்டு, வாய்ப்பாடு மற்றும் டிராயிங் புக் உள்ளிட்டவை அடங்கிய சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

மேலும், சிறப்பு விருந்தினர்களுடனான குழந்தைகளின் கல்விப் பயண துவக்கத்தின் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டது. பெற்றோர், குழுந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us