sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மெயின் தேர்வு எழுதிய உணர்வை தந்த தினமலர் 'நீட் மாதிரி தேர்வு'

/

மெயின் தேர்வு எழுதிய உணர்வை தந்த தினமலர் 'நீட் மாதிரி தேர்வு'

மெயின் தேர்வு எழுதிய உணர்வை தந்த தினமலர் 'நீட் மாதிரி தேர்வு'

மெயின் தேர்வு எழுதிய உணர்வை தந்த தினமலர் 'நீட் மாதிரி தேர்வு'


UPDATED : ஏப் 28, 2025 12:00 AM

ADDED : ஏப் 28, 2025 01:46 PM

Google News

UPDATED : ஏப் 28, 2025 12:00 AM ADDED : ஏப் 28, 2025 01:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரையில் தினமலர் - ஸ்டாரெட்ஸ் இணைந்து நடத்திய தினமலர் நீட் மாதிரித் தேர்வு, நீட் மெயின் தேர்வினை எழுதிய உணர்வைத் தந்தது என மாணவர்கள் உற்சாகம் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்து மருத்துவக் கனவில் உள்ள மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தினமலர் சார்பில் இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு மே 4 ல் நடக்கும் நீட் தேர்வில் பங்கேற்க தயாராகி வரும் மாணவர்களுக்கு மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நேற்று தினமலர் சார்பில் நீட் மாதிரி தேர்வு நடந்தது. இதில் 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

முன்பதிவு செய்தவர்கள் காலை 9:30 மணிக்கு வரவேண்டும் எனவும், 9:45 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், ஆர்வ மிகுதியால் காலை 8:00 மணிக்கே பெற்றோருடன் மாணவர்கள் வந்தனர். அவர்கள் சரியான நேரத்தில் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1:15 மணி வரை தமிழ், ஆங்கிலத்தில் தேர்வு எழுதினர். அரசு நடத்தும் நீட் தேர்வு போன்றே நடத்தப்பட்டது. தேர்வு முடியும் வரை பெற்றோர் அமர்வதற்கு கல்லுாரி வளாகத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us