எம்.இ., - எம்.டெக்., படிப்பில் காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை
எம்.இ., - எம்.டெக்., படிப்பில் காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை
UPDATED : செப் 27, 2025 09:53 AM
ADDED : செப் 27, 2025 09:55 AM

சென்னை:
எம்.இ., - எம்.டெக்., காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை நடத்த, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகள், மண்டல கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணாமலை பல்கலையில், எம்.இ., - எம்.டெக் மாணவர் சேர்க்கையை, தமிழக அரசு நடத்தும், 'சீட்டா' நுழைவுத் தேர்வின் தரவரிசை அடிப்படையிலும், மத்திய உயர் கல்வி நிறுவனங்கள் நடத்தும், 'கேட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், அண்ணா பல்கலை நடத்துகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான, எம்.இ., - எம்.டெக் 'ஆன்லைன் கவுன்சிலிங்' சமீபத்தில் நிறைவடைந்தது. மொத்தமுள்ள 2,000க்கும் அதிகமான இடங்களில், 60 சதவீத இடங்கள் தற்போது நிரம்பி உள்ளன.
மீதமுள்ள 40 சதவீத இடங்களை, அந்தந்த கல்லுாரிகளில், நேரடி சேர்க்கை வழியே நிரப்ப, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. விரைவில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.