UPDATED : டிச 24, 2024 12:00 AM
ADDED : டிச 24, 2024 09:54 PM
சென்னை:
பள்ளிகளின் மாதாந்திர சேவை கட்டணத்தை, இணையதள சேவை நிறுவனங்களுக்கு உடனடியாக செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வீதம், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதாந்திர இணையதள கட்டணமாக, 3.73 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2,973 உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வீதம், ஆகஸ்ட் மாதத்திற்கு, 44.59 லட்சம் ரூபாய், 3,074 மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஆக., செப்., மாதங்களுக்கு, 99.22 லட்சம் ரூபாய் என, 1.36 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, 6,224 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இணையதள வசதிக்கான மாதாந்திர கட்டணமாக, 3 கோடி, 26 லட்சத்து, 40,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, 3,088 உயர்நிலை பள்ளிகளுக்கு, ஒரு கோடி 85 லட்சத்து, 28,000 ரூபாயும், 3,136 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு கோடி 41 லட்சத்து, 12,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் மாதாந்திர சேவை கட்டணத்தை, இணையதள சேவை நிறுவனங்களுக்கு உடனடியாக செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய விபரங்களை, பள்ளியின், எமிஸ் இணையதளத்தில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவேற்ற வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.