தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்; போராட்டம் அறிவித்தது ஜாக்டோ ஜியோ
தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்; போராட்டம் அறிவித்தது ஜாக்டோ ஜியோ
UPDATED : மார் 15, 2025 12:00 AM
ADDED : மார் 15, 2025 10:50 PM
சென்னை:
பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதால், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 23ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
அதன் ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கை:
பட்ஜெட்டில், 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், பட்ஜெட் அறிவிப்பில், எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது.
எனவே, நேற்று நடந்த மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 23ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, மார்ச் 30ம் தேதி அடுத்தக் கட்ட நடவடிக்கையை முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.