தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/300 மாணவர்களுக்கு பேரிடர்கால பயிற்சி வழங்க ஏற்பாடு

300 மாணவர்களுக்கு பேரிடர்கால பயிற்சி வழங்க ஏற்பாடு

300 மாணவர்களுக்கு பேரிடர்கால பயிற்சி வழங்க ஏற்பாடு


UPDATED : ஆக 11, 2026 04:49 PM

ADDED : ஆக 11, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 04:49 PM ADDED : ஆக 11, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
மாவட்டத்தில் 300 கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு பேரிடர் கால பயிற்சி வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக பேரிடர் மேலாண்மைத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி உள்ளிட்டவை பேரிடர் ஆகும். பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சுமார் 300 பேருக்கு ஒருவாரம் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்லுாரி என்.சி.சி., மை பாரத் அமைப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்வாகுபவர்களுக்கு நிலச்சரிவு, தீ விபத்து, அவசர காலங்களில் பிறரை தொடர்பு கொள்ளுதல், தங்களை பாதுகாத்து பிறருக்கு உதவுதல், முதலுதவி வழங்குதல், பேரிடர் பகுதிகளில் அறிவிப்பு செய்தல் உள்ளிட்ட பயிற்சிகளை சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, போலீசார், வருவாய்த்துறை இணைந்து வழங்க உள்ளோம்,' என்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us