UPDATED : ஜூலை 14, 2026 05:17 PM
ADDED : ஜூலை 14, 2026 05:18 PM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு, பேரிடர் நிவாரண பயிற்சி வழங்கப்பட்டது.
இந்தியா முழுதும் 'யுவ ஆப்தா மித்ரா' திட்டத்தில், இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பேரிடர் நிவாரண பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதில், என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எவ்வாறு மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபடுவது குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 கல்லுாரிகளில் பயிலும் 239 மாணவர்களுக்கு காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலைகழ வளாகத்தில், பேரிடர் நிவாரண பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
6ம் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணம் பற்றிய உத்திகள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன் பின், பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுக்கு, 8,.500 ரூபாய் மதிப்புள்ள, 16 சுய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கான சான்றிதழ்களை, கலெக்டர் வீரப்பன், நேற்று முன்தினம், வழங்கினார்.
