தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ இரண்டாம் பருவ பாடபுத்தகம் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பு

இரண்டாம் பருவ பாடபுத்தகம் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பு

இரண்டாம் பருவ பாடபுத்தகம் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பு


UPDATED : அக் 05, 2024 12:00 AM

ADDED : அக் 05, 2024 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2024 12:00 AM ADDED : அக் 05, 2024 09:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் புவனகிரி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், கம்மாபுரம், விருத்தாசலம், மங்களூர், நல்லுார் உள்ளிட்ட ஏழு ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் 680 அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் உள்ளன. இந்நிலையில், முதல் பருவ தேர்வு விடுமுறை முடிந்து, வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இதன்காரணமாக, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) சேகர் தலைமை தாங்கி, புத்தகம் அனுப்பும் பணியை துவக்கி வைத்தார். அப்போது, விருத்தாசலம், பண்ருட்டி, கம்மாபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, செல்வம், கலைச்செல்வி உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us