சிறப்பு வகுப்புகளால் அதிருப்தி: கல்வித்துறைக்கு கோரிக்கை
சிறப்பு வகுப்புகளால் அதிருப்தி: கல்வித்துறைக்கு கோரிக்கை
UPDATED : ஏப் 19, 2024 12:00 AM
ADDED : ஏப் 19, 2024 11:02 AM

உடுமலை:
கோடை வெப்பம் குறையும் வரை, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு நிறைவடைந்து, மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டுமே இரண்டு தேர்வுகள் ஏப்., 22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது.
வழக்கத்தை விடவும், நடப்பாண்டில் கோடை தாக்கம் அதிகரித்த நிலையில் இருப்பதால், முன்னதாக விடுமுறை அறிவித்ததையொட்டி பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பெற்றோருக்கு மீண்டும் அதிருப்தி அளிக்கும் வகையில், பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
புதிய கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 செல்ல உள்ள மாணவர்களுக்கு, பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு கோடையின் தாக்கத்தால், பல்வேறு வெப்ப நோய்கள் ஏற்படும் என பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
கோடை வெப்பம் குறையும் வரை, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதை, கல்வித்துறை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென, பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.