மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
UPDATED : ஜூலை 21, 2026 04:40 PM
ADDED : ஜூலை 21, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலூர்:
திருக்கோவிலுார் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் தலைமை தாங்கினார்.
வட்டார கல்வி அலுவலர் வேணுகோபால் வரவேற்றார்.
மாற்றுத்திறனுடைய 42 மாணவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சிறப்பு பயிற்றுநர்கள் ஜெயசீலன், சுமதி, சுமையா, கலா, இயன்முறை மருத்துவர் இளவரசன் செய்திருந்தனர்.
