தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவக்கம்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவக்கம்

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவக்கம்


UPDATED : மே 14, 2026 06:00 PM

ADDED : மே 14, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2026 06:00 PM ADDED : மே 14, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது.

பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த 8ல் வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம், தமிழகத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்தது. 13ல் மாணவ, மாணவியருகு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி நேற்று அனைத்து அரசு, நிதியுதவி, தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி துவங்கியது. முன்னதாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம், அந்தந்த பள்ளிகளின் சார்பில் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்று சென்றனர். சான்றிதழில் பிழைகள் ஏதேனும் இருப்பின், உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழில் பிழைகள் நீக்கப்பட்டு கிடைக்க பெறும்.

மாணவ,மாணவியர் பிழைகளை கண்டறிந்து கூறாத பட்சத்தில் பிழையுடன் கூடிய சான்றிதழே கிடைக்கும். எனவே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நன்கு ஆராய்ந்து பிழைகள் இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி, ஓரிரு நாட்களில் நிறைவு பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us