UPDATED : ஜூன் 02, 2025 12:00 AM
ADDED : ஜூன் 02, 2025 10:19 AM
உடுமலை:
உடுமலை வட்டாரத்தில், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான புத்தக வினியோகம் துவங்கியுள்ளது.
உடுமலை கோட்டத்துக்குட்பட்ட குடிமங்கலம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், 258 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்கள், மே முதல் வாரம் மாவட்ட கல்வித்துறையிலிருந்து, ஒவ்வொரு வட்டார மையங்களுக்கும் வினியோகிக்கப்பட்டன.
விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டு ஜூன் 2ம் தேதி துவங்குகிறது. பள்ளி திறக்கும் முதல் நாளில், மாணவர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென, அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, பள்ளி தலைமையாசிரியர்கள் நேற்று வட்டார மையங்களிலிருந்து பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச்சென்றனர். உடுமலை வட்டாரத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புத்தகங்கள், சீருடைகள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அப்பள்ளிக்கு வந்து புத்தகங்கள் மற்றும் சீருடைகளை பெற்றுச்சென்றனர்.