UPDATED : மார் 24, 2026 10:53 AM
ADDED : மார் 24, 2026 10:55 AM
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் சுழற்கோப்பைகளுக்கான மாவட்ட அளவிலான டேக், டி.டி.சி.ஏ., கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்தன.
பழநி டாமிநேட்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 48 ஓவர்களில் 315/8 ரன்கள் (விக்னேஷ் 64, பாரத்குமார் 43, கேசவன் 110, சந்துருவிக்னேஷ் 43) எடுத்தது. எதிர்த்து விளையாடிய வேடசந்துார் ஜாஹிர் கிரிக்கெட் கிளப் அணி 47.1 ஓவர்களில் 200 ரன்கள் (விஜயராஜ் 43, காளிதாஸ் 34, அருண்குமார் 25, விக்னேஷ் கணபதி 28, ராகுல் சின்ஞ்ஜூ 4/24) எடுத்து 'ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.
சின்னாளபட்டி காந்திகிராம பல்கலை அணி 20.5 ஓவர்களில் 81 ரன்கள் (எட்வின் அரசன் 3/7) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. திண்டுக்கல் சாமியார்தோட்டம் கிரிக்கெட் கிளப் அணி 15.4 ஓவர்களில் 84/5 ரன்கள் (ராம்குமார் 55, நாட் அவுட், வினோத் கண்ணன் 4/14) எடுத்து வெற்றி பெற்றது. வேடசந்துார் சீனிபாலா கிரிக்கெட் கிளப் அணி 22.3 ஓவர்களில் 97 ரன்கள் (ஜீவானந்தம் 3/22) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 14.1 ஓவர்களில் 100/4 ரன்கள் (அன்பு பாண்டியன் 38) எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் பாரத் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 153/5 ரன்கள் (புனிதன் 28, நிரஞ்சன் 29, வீரமணி 47) எடுத்தது. எதிர்த்து விளையாடிய எரியோடு ஸ்கில் கிரிக்கெட் கிளப் அணி 23.5 ஓவர்களில் 154/4 ரன்கள் (ரமேஷ் 27, பிரவீன்குமார் 80, நாட் அவுட், கார்த்திகேயன் 32) எடுத்து வெற்றி பெற்றது. பழநி சுப்ரமண்யா கிரிக்கெட் கிளப் அணி 24.5 ஓவர்களில் 130 ரன்கள் (அவினாஸ் 29, சீனிவாசன் 40, ராகுல்குமரன் 4/22) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது.
எதிர்த்து விளையாடிய எரியோடு எங்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 17.1 ஓவர்களில் 131/3 ரன்கள் (பூபதிராஜா 43, நாட் அவுட், மனோகரன் 61) எடுத்து வெற்றி பெற்றது. திண்டுக்கல் ஆல் ரவுண்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 140/9 ரன்கள் எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 23.1 ஓவர்களில் 141/5 ரன்கள் (பாரதிதாசன் 50, நாட் அவுட், தினேஷ் 32, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் மெஜஸ்டிக் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 131/6 ரன்கள் (கணேஷ் 32, செந்தில்குமார் 26) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் சாம்பியன்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 21.4 ஓவர்களில் 119 ரன்கள் (அதுல்குமார் மஞ்சில் 57, சந்தோஷ்ராஜ் 3/52, விக்னேஷ் 3/21, ஜெயந்தன் 3/20) எடுத்து 'ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.
