புத்தகம் படிக்கணுமா... டோன்ட் ஒர்ரி அபார்ட்மென்டுக்குள்ளே இருக்கு லைப்ரரி!
புத்தகம் படிக்கணுமா... டோன்ட் ஒர்ரி அபார்ட்மென்டுக்குள்ளே இருக்கு லைப்ரரி!
UPDATED : ஜூன் 03, 2024 12:00 AM
ADDED : ஜூன் 03, 2024 09:04 AM
கோவை: ஒரு நல்ல அபார்ட்மென்ட்னாலே நல்ல அமைதியான சுற்றுச்சூழல், குழந்தைங்க பார்க், ஜிம், ஸ்விம்மிங்பூல், வாக்கிங் பாத், பங்ஷன் ஏரியானு அனைத்தும் இருக்கும்னு எல்லாருக்கும் தெரியும்.
ஆனால், ஒரு அபார்ட்மென்டுல ஒரு மினி லைப்ரெரியே இருக்குனு சொன்னா நம்புவீங்களா.... ஆமாங்க... மான்செஸ்டர் சித்தாரா அபார்ட்மென்டுலதான், இப்படி யூஸ்புல்லா பண்ணியிருக்காங்க.
பீளமேடு, தண்ணீர்பந்தல் ஏரியால இருக்கு, இந்த அபார்ட்மென்ட். இதோட செகரட்டரி பிரேமலதாகிட்ட பேசினோம்...!
எங்க அபார்ட்மென்ட்ல 148 வீடுகள் இருக்கு. 500க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். இங்க ஒவ்வொருத்தர் வீட்டுலயும், ஒவ்வொரு விதமான புத்தகங்களை வாங்கி படிப்போம். புத்தகங்களை முதல்ல, ேஷர் பண்ணிதான் படிச்சுக்கிட்டு வந்தோம்.
அப்பதான் ஒரு யோசனை தோணிச்சு. ஏன் நம்ம அபார்ட்மென்ட்லயே ஒரு லைப்ரெரி ஆரம்பிக்க கூடாதுன்னு. ஆரம்பத்துல 30, 40 புத்தகங்கள்னு ஆரம்பிச்சு, இப்ப 650க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்க இருக்கு.
மினி இந்தியா மாதிரி எல்லா மொழி பேசுற மக்களும், இங்க இருக்கறதால தமிழ் மட்டுமில்லாம ஆங்கில புத்தகங்களும் வெச்சிருக்கோம்.
ஆன்மிகம், குழந்தைகளுக்கான பன் புக், நாவல்கள், கதை புத்தகங்கள், அரசியல் தலைவர்கள், யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி.,போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், நாளிதழ்கள், வார, மாதஇதழ்களும் இங்க வெச்சிருக்கோம்.
பிறந்த நாள் உள்ளிட்ட, எல்லா நல்ல நாள்லயும் இங்க புத்தகத்தை டொனேட் பண்ணுவாங்க. இதன் மூலமா குழந்தைங்க, பெரியவங்கன்னு எல்லார்கிட்டயும் புத்தகம் படிக்கற பழக்கம் உருவாகியிருக்கு.
- முகத்தில் பெருமிதம் பொங்க பேசினார் பிரேமலதா.