UPDATED : ஏப் 25, 2024 12:00 AM
ADDED : ஏப் 25, 2024 09:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அண்ணாநகரைச் சேர்ந்த முருகன், 45, அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர். 2015ல் அங்கு படிக்கும் 6 சிறுமியருக்கு, பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் படி, அவரை சிவகங்கை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கை, சிவகங்கை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் விசாரித்து, முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 69,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.