ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஓவிய போட்டி
ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஓவிய போட்டி
UPDATED : ஆக 20, 2026 09:32 PM
ADDED : ஆக 20, 2026 09:33 PM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் ஒன்றிய, அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சார்பில், 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
இதில், 20 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். திடக்கழிவு மேலாண்மை குறித்து சிறப்பாக ஓவியம் மூலம் படம் வரைந்த மாணவர்களுக்கு, டவுன் பஞ்., சார்பில் பரிசு வழங்கப்படுகிறது.
ஏற்பாடுகளை கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
