தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓவிய போட்டி பரிசளிப்பு

ஓவிய போட்டி பரிசளிப்பு

ஓவிய போட்டி பரிசளிப்பு


UPDATED : ஜூலை 14, 2026 05:20 PM

ADDED : ஜூலை 14, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2026 05:20 PM ADDED : ஜூலை 14, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி மாநில ஓவியர் மன்றம் மற்றும் புதுச்சேரி ஓவிய பள்ளி ஆகியன சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா துாய இருதய ஆண்டவர் பள்ளியில் நடந்தது.

தலைமை ஆசிரியை மோட்ச ராகினி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தாகூர் கலைக் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜன் கலந்து கொண்டு காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார்.

மோட்ச ராக்கினி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, காமராஜர் செய்த பல்வேறு பணிகள் குறித்து விளக்கினார். ஓவியப் போட்டியில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

முன்னதாக பாடகி ஜானகிக்கு ஓவிய பள்ளியின் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஓவியர் செல்வம் எமில் நோக்கவுரையாற்றினார். ஆசிரியர் ராமலிங்கம் நினைவு பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை ஓவியர் வரதராஜன், ஷர்மிளா, ஆரோக்கிய மேரி, வசந்தி, இபேர் ஆகியோர் செய்திருந்தனர். ஓவியர் கார்முகிலன் நன்றி கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us