அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு ட்ரோன், ரோபோடிக் டெக்னாலஜி பயிற்சி
அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு ட்ரோன், ரோபோடிக் டெக்னாலஜி பயிற்சி
UPDATED : ஆக 17, 2026 03:43 PM
ADDED : ஆக 17, 2026 03:47 PM
காஞ்சிபுரம்:
அரசு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கான, 'ட்ரோன், ரோபோடிக் டெக்னாலஜி மற்றும் 3 டி பெயிண்டிங்' குறித்த அடிப்படை பயிற்சி காஞ்சிபுரம் கா.மு.சு., மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
காஞ்சி டிஜிட்டல் டீம், வில்லேஜ் டெக்னாலஜி ஸ்கூல் அமைப்பு சார்பில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கும், ஆசிரியர்களுக்கும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தை கற்கும் வகையில், 'ட்ரோன், ரோபோடிக் டெக்னாலஜி மற்றும் 3 டி பெயிண்டிங்' குறித்த அடிப்படை பயிற்சி காஞ்சிபுரம் கா.மு.சு., மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
வில்லேஜ் டெக் ஸ்கூல் நிறுவனர் பாலாஜி, இணை நிறுவனர் பாலாஜி வரதன், சுந்தர், உள்ளிட்டோர் 'ட்ரோன், ரோபோடிக் டெக்னாலஜி மற்றும் 3 டி பெயிண்டிங்' குறித்து பயிற்சி அளித்தனர். 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 பயிலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர் 16 பேர் மற்றும் ஆசிரியர்கள் 25 பேர் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
மேலும், கற்றல், கற்பித்தல் செயல்பாட்டிற்கு தொழில்நுட்பம் எவ்வாறு உதவி செய்யும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது நிகழ்வை காஞ்சி டிஜிட்டல் டீம் அன்பழகன் பழமலைநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்து இருந்தனர்.
