UPDATED : செப் 22, 2025 12:00 AM
ADDED : செப் 22, 2025 08:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி:
கொட்டாம்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் சார்பில் பள்ளி செல்லாதோர் கணக்கெடுக்கும் பணி நடந்தது.
இப்பணியில் வட்டார கல்வி அலுவலர் தர்மராஜன், மேற்பார்வையாளர் ரவிகணேஷ், குழந்தை தொழிலாளர் தடுப்பு அலுவலர் நிவேதா, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஈடுபட்டனர். இதில் காளிச்செல்வம், அஜய், மாற்றுத்திறனாளி மாணவர் தர்மபிரகாஷை கொட்டாம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தனர்.

