தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தெரிந்தே செய்யும் தவறு போதை பழக்கம் தான்

தெரிந்தே செய்யும் தவறு போதை பழக்கம் தான்

தெரிந்தே செய்யும் தவறு போதை பழக்கம் தான்


UPDATED : ஜூலை 02, 2026 06:32 PM

ADDED : ஜூலை 02, 2026 06:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2026 06:32 PM ADDED : ஜூலை 02, 2026 06:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
சர்வதேச போதைப்பொருள் பயன்பாட்டு தடுப்பு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மனநலத்துறை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.,) திருப்பூர் கிளை சார்பில், 'போதைப்பொருள் தவிர்ப்போம்; வாழ்வை வள மாக்குவோம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் முன் நடைபெற்றது.

கல்லுாரி துணை முதல்வர் பத்மினி, இருப்பிட மருத்துவ அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், ஹரிஹர குகன் முன்னிலை வகித்தனர். மனநலத்துறை மருத்துவர் ரங்கநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

கதிரவன் நாடகக் குழுவினர், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதன் சமூக விளைவுகளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் மனோன்மணி பேசுகையில், “போதைப்பொருள் பயன்பாடு தனிநபரின் உடல் மற்றும் மனநலத்தை மட்டுமல்லாமல் குடும்ப அமைதி, சமூக அமைதியையும் பாதிக்கிறது. பின்விளைவுகள் தெரிந்தே செய்யும் தவறுதான் போதைப் பழக்கம்.

போதை என்பது ஒரு மனநோய். அதிலிருந்து மீள அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு இலவச சிகிச்சை பெறும் வசதி உள்ளது. நல்ல நண்பர்களையும், நல்ல பழக்கங்களையும் தேர்வு செய்து, போதைப் பழக்கத்திலிருந்து விலக வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லுாரியிலும், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us