ராஜிவ்காந்தி அரசு கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு
ராஜிவ்காந்தி அரசு கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு
UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 09:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்:
தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கல்லுாரியில் போதை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
தவளக்குப்பம் ராஜிவ்காந்தி அரசு கல்லுாரி மற்றும் போதை பொருட்கள் மீட்பு குழுவினர் இணைந்து, கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர். கல்லுாரி முதல்வர் மோனிஷா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் ஜெயகுமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் பங்கேற்று பேசினார். போதை பொருட்களின் தீமைகள் பற்றியும், இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
மாணவி கலையரசி நன்றி கூறினார்.