தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரு நாளில் படிப்பு பாதிக்காது என்கிறார் துரைமுருகன்

ஒரு நாளில் படிப்பு பாதிக்காது என்கிறார் துரைமுருகன்

ஒரு நாளில் படிப்பு பாதிக்காது என்கிறார் துரைமுருகன்


UPDATED : அக் 09, 2025 08:15 AM

ADDED : அக் 09, 2025 08:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2025 08:15 AM ADDED : அக் 09, 2025 08:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மோசூர் அரசு தொடக்கப்பள்ளி, சூரை அரசு உயர்நிலைப்பள்ளி, மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது .

இதனால் மாணவர்கள், அவதியடைந்தனர். இதற்கிடையே, குமணன் தாங்கலில் உள்ள அரசுப் பள்ளியிலும், முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி:

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அரசு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அரசு பள்ளியில் நடைபெறுகிறதே என கேட்கிறீர்கள். ஒரே நாளில், அப்படி எதுவும், பள்ளியில் பாடம் நடந்து விடாது. இதனால் மாணவர்களுக்கு கல்வியில் இடையூறு ஏற்படாது .

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us