UPDATED : செப் 21, 2024 12:00 AM
ADDED : செப் 21, 2024 07:17 AM
மைசூரு:
தசரா திரைப்பட திருவிழாவுக்கு, தமிழ் குறும்படம், 99 தேர்வாகி உள்ளது.
மைசூரு தசரா விழாவில், ஆண்டுதோறும் திரைப்பட திருவிழா நடக்கும். இந்த வகையில், இந்தாண்டும் திரைப்பட திருவிழா நடத்துவதற்கு, முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் குறும்படங்களும் திரையிடப்படும். இதற்காக, கன்னடம் - 63, தமிழ் - 4, கொடவா - 1, ஹிந்தி - 1, லம்பானி - 1, ஊமை படம் - 2 என 72 குறும்படங்கள் விண்ணப்பிக்கப்பட்டன.
இதில், எந்தெந்த குறும்படங்கள் திரைப்பட திருவிழாவுக்கு தேர்வு செய்யலாம் என்பது குறித்து, இம்மாதம் 16ம் தேதி ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்வு செய்யப்பட்ட ஒன்பது குறும்படங்களின் பட்டியலை, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனர் ஹரீஷ், அறிவித்தார்.
கன்னடத்தில், அபிஜித் புரோஹித் இயக்கிய லட்சுமி; அசோக் ராஜ் இயக்கிய யாரே நீ யாரே; பவன் இயக்கிய அன்வான்டெட் கிட்; திலீப்குமார் இயக்கிய போலார்; ஸ்டானி ஜொய்சன் இயக்கிய த்ரீ காலம்; கிருதர்த் மண்டேகுட்டண்டா இயக்கிய வர்தகள்ளி.
சூரஜ் சங்கர் இயக்கிய திரெட் ஆப் டெஸ்டினி ஏ ஹாப்பி டிஸ்கவரி; ஜீவன்கவுடா இயக்கிய ராஜ் அம்மு; ரகு நாயக் இயக்கிய ஷட்டத; தமிழில் கனகராஜ் பாலசுப்பிரமணியம் இயக்கிய 99 ஆகிய படங்கள் தசரா திரைப்பட திருவிழாவின் போது, ஐனாக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட உள்ளன.