sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்தியர்களுக்கு இ-விசா: தாய்லாந்து அறிவிப்பு

/

இந்தியர்களுக்கு இ-விசா: தாய்லாந்து அறிவிப்பு

இந்தியர்களுக்கு இ-விசா: தாய்லாந்து அறிவிப்பு

இந்தியர்களுக்கு இ-விசா: தாய்லாந்து அறிவிப்பு


UPDATED : டிச 13, 2024 12:00 AM

ADDED : டிச 13, 2024 06:13 PM

Google News

UPDATED : டிச 13, 2024 12:00 AM ADDED : டிச 13, 2024 06:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
இந்திய பாஸ்போர்ட் வைத்து உள்ளவர்கள், வரும் ஜன., 1 முதல் இ -விசாவை பெற்றுக் கொள்ளலாம் என டில்லியில் உள்ள தாய்லாந்து தூதரகம் கூறியுள்ளது.

இது குறித்து டில்லியில் உள்ள தாய்லாந்து துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஜன., 1 முதல் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு இ-விசா பெற்றுக் கொள்ளலாம். தாய்லாந்து நாட்டவர்கள் அல்லாதவர்கள், அனைத்து விசா வகைகளுக்கும் //www.thaievisa.go.th என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாகவோ அல்லது விண்ணப்பதாரர்கள் மூலமோ விண்ணப்பிக்கலாம். விசா கட்டணம் செலுத்திய 14 நாட்களுக்குள் இதில் முடிவெடுக்கப்படும்.

சுற்றுலா மற்றும் வணிக நோக்கங்களுக்காக, தாய்லாந்து வரும் இந்தியர்கள், 60 நாட்கள் விசா இன்றி தங்கிக் கொள்ளும் சலுகை மறு அறிவிப்பு வரும்வரை அமலில் இருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us