UPDATED : மே 01, 2024 12:00 AM
ADDED : மே 01, 2024 10:48 AM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பூமி தின விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.
பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பூமி தின விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் விழா, பள்ளி மாணவ, மாணவியருக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் மற்றும் நர்சிங் கல்லுாரி மாணவியருக்கான கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றன.
விழாவுக்கு, மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார். டாக்டர்கள் கார்த்திகேயன், மாரிமுத்து முன்னிலை வகித்தனர். கட்டுரை, கவிதை போட்டியில் மருத்துவ குழு தேர்வு செய்த அபிராமி நர்சிங் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், உலக பூமி தினத்தை விழிப்புணர்வாக கொண்டாடும் வகையில், பொள்ளாச்சி பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர், தமிழசிரியர் பாலமுருகன் ஒருங்கிணைப்பில் வருகை தந்து மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் பூமி தினத்தை அனுசரிக்கும் வகையில் புங்கை, மகிழம், நாவல் மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன்பின், மாணவ, மாணவியருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
நோயாளிகள் நலச் சங்க உறுப்பினர்கள் நடராஜ், முருகானந்தம், சுப்ரமணியம் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.