தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொருளியல் பாடம் எளிதாக புரிய 'அனிமேஷன்' வடிவில் உருவாக்கம்

பொருளியல் பாடம் எளிதாக புரிய 'அனிமேஷன்' வடிவில் உருவாக்கம்

பொருளியல் பாடம் எளிதாக புரிய 'அனிமேஷன்' வடிவில் உருவாக்கம்


UPDATED : நவ 14, 2025 07:42 AM

ADDED : நவ 14, 2025 07:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2025 07:42 AM ADDED : நவ 14, 2025 07:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல்:
பிளஸ் 2 மாணவர்கள், பொருளியல் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'அனிமேஷன்' வடிவில் பாடங்களை, அரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கி அசத்தி உள்ளார்.

தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்கள், கல்வியில் சிறந்த விளங்கவும், கற்றலில் மேம்பாடு அடையவும், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவும், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆர்.புதுப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பொருளியல் ஆசிரியர் சக்திவேல், பொருளாதார பாடங்களை, 'அனிமேஷன்' வீடியோ வடிவங்களாக வடிவமைத்து உருவாக்கி உள்ளார்.

மெல்ல கற்கும் மாணவர்களை மட்டுமல்லாமல், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், கற்றல் ஆர்வத்தை துாண்டி கவ-னத்தை ஈர்த்து, கல்வியில் நாட்டத்தை ஏற்படுத்தும். இந்த, 'அனிமேஷன்' வடிவிலான புதிய முயற்சி மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ காணொளி வடிவ பாடங்களை, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, நேற்று துவக்கி வைத்து, மாணவர்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டார். மேலும், சிறப்பான பணியை மேற்கொண்ட சக்திவேலுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

மாவட்ட உதவி திட்ட அலுவலர் அருள்தாஸ், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் அப்துல்வகாப், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொருளாதார ஆசிரியர் ஜெகதீசன், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us