கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து: ஸ்டாலின்
கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து: ஸ்டாலின்
UPDATED : ஆக 13, 2024 12:00 AM
ADDED : ஆக 13, 2024 11:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த துர்கா என்பவர், திருத்துறைபூண்டி நகராட்சி ஆணையராக பணி நியமன ஆணை பெற்றார். தூய்மை பணியாளரின் மகளான நான் தமிழக அரசின் திட்டங்கள் மூலம், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதி வெற்றி பெற்று பணி நியமனம் பெற்றேன் என துர்கா பேட்டி ஒன்றில் கூறினார்.
துர்காவின் பேட்டியை அறிந்த முதல்வர் ஸ்டாலின், கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து, தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராக உள்ளதை அறிந்தேன். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் மிக்கது என்பதற்கு துர்கா எடுத்துக்காட்டு என்று தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.