UPDATED : ஆக 24, 2026 05:04 PM
ADDED : ஆக 24, 2026 05:05 PM
ஈரோடு:
மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கல்விக்கடன் முகாம் ஈரோட்டில் நாளை நடக்கிறது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கிறது.
கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள், தங்களது மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், பான் கார்டு, சாதிச்சான்று, பெற்றோரின் ஆண்டு வருமான சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மதிப்பெண் மற்றும் மாற்று சான்றிதழ், கலந்தாய்வு கடிதம் அல்லது நுழைவு தேர்வு முடிவு, கல்லூரி ஒப்புதல் கடிதம் அல்லது கல்லூரி சேர்க்கை கடிதம், முதல் பட்டதாரி சான்று மற்றும் உறுதிமொழி சான்று ஆகியவற்றுடன் https://pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தின் வாயிலாக வங்கிகளுக்கு விண்ணப்பிக்கவும். தகுதியான அனைவரும் முகாமை பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
