UPDATED : அக் 22, 2026 05:50 PM
ADDED : அக் 22, 2026 05:51 PM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது.
கலெக்டர் அலுவலக வளாக தரைதளத்தில், அறை எண்: 20ல் உள்ள கூட்ட அரங்கில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும். இதில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்கின்றன.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in என்கிற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து, அதன் நகலுடன் முகாமில் பங்கேற்க வேண்டும்.
விண்ணப்ப நகல், மாணவர் மற்றும் பெற்றோரின் தலா 2 புதிய புகைப்படம், பேங்க் பாஸ் புக் முதல் பக்க நகல், ஆண்டு வருமான சான்று, சாதி சான்று, பான் கார்டு, ஆதார், கல்விக் கட்டண விவரம், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றுகள்; முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்று, கல்வி உதவித்தொகை வாயிலாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கியை 0421 - 2971185 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
