தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி அமைச்சர் பெயரை பொய்மொழி என மாற்றலாம்

கல்வி அமைச்சர் பெயரை பொய்மொழி என மாற்றலாம்

கல்வி அமைச்சர் பெயரை பொய்மொழி என மாற்றலாம்


UPDATED : நவ 20, 2024 12:00 AM

ADDED : நவ 20, 2024 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2024 12:00 AM ADDED : நவ 20, 2024 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலுக்கு பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நேற்று வந்து மூலவரை தரிசித்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:


புதுடில்லியில் மாசு அதிகரித்துள்ளது. அதனால், பல தீங்குகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு முதல் காரணம் டில்லி அரசின் மோசமான செயல்பாடுதான்.

தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி, தன் பெயரை பொய்மொழி என மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. அந்த அளவுக்கு பொய் பேசுகிறார். அவர் சொல்லும் அனைத்துத் தகவல்களுமே பொய். இப்படித்தான் மற்ற அமைச்சர்களும் உள்ளனர். மொத்தத்தில், தி.மு.க., அமைச்சர்கள் ஒருவருக்குக்கூட நிர்வாகம் செய்ய தெரிவில்லை.

தமிழகத்தில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் இணை ஆணையர் தலைமையின் கீழ் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூட்டம் நடத்தவில்லை. அது ஏன்?

மத்திய அரசு, பட்டியல் சமுதாய மக்களுக்கு ஒதுக்கிய 5,000 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுதான் நடக்கிறது. மேலும், 14வது நிதி குழு பரிந்துரையின் பேரில் 32 சதவீதம் வெர்டிக்கல் நிதி பகிர்மானத்தை, 42 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

அரசின் நல திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டுவதற்கு பதிலாக, சுதந்திரப் போராட்டத்திற்கும், தமிழுக்கும் போராடிய தலைவர்களின் பெயர்களை சூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us