டோல் கேட் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி
டோல் கேட் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி
UPDATED : மார் 21, 2026 11:31 AM
ADDED : மார் 21, 2026 11:32 AM

விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி டோல் கேட்டில் பணி புரியும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி, உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் டோல் கேட்டில், டில்லி நகாய் நிறுவனம், ஆரோஹன் திட்டத்தின் கீழ் டோல் கேட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திட்ட மேலாளர் சதீஷ் குமார் தலைமை தாங்கினார்.
டோல்கேட் பாதுகாப்பு மேலாளர் அசோக்குமார், துணை மேலாளர்கள் சொர்ண மணி, சண்முகம் முன்னிலை வகித்தனர். பி.ஆர்.ஓ., தண்டபாணி வரவேற்றார். நகாய் செயல்பாட்டு அலுவலர் கார்த்திகேயன், எல்.எல்.சி., நிறுவன பொறியாளர் ரமேஷ் ஆகியோர் பிளஸ் 2 மாணவர்கள் 3 பேருக்கு தலா 12 ஆயிரம் ரூபாய், கல்லுாரி மாணவர்கள் 9 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் என 4 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கினர்.
நிகழ்ச்சியில் டோல்கேட் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

