கடலுாரில் கல்விக்கடன் முகாம் 750 மாணவர்களுக்கு ரூ.11.56 கோடி கடன்
கடலுாரில் கல்விக்கடன் முகாம் 750 மாணவர்களுக்கு ரூ.11.56 கோடி கடன்
UPDATED : நவ 01, 2026 01:57 PM
ADDED : நவ 01, 2026 01:58 PM
கடலுார்:
கடலுாரில் நடந்த கல்விக்கடன் முகாமில் கலெக்டர் 750 மாணவர்களுக்கு ரூ. 11.56 கோடி கடனுதவி வழங்கினார்.
மாணவர்கள் உயர்கல்வி கனவை அடைவதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முதல்வர் உத்தரவிற்கிணங்க, கடலுார் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மெகா கல்வி கடன் முகாம், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கல்லுாரியில் நடந்தது.
முகாமில் ஸ்டேட் பாங்க், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி, ஆக்சிஸ் உள்ளிட்ட பல்வேறு வங்கியாளர்கள் பங்கேற்றனர்.
முகாமில், தேர்வு செய்யப்பட்ட 750 மாணவர்களுக்கு ரூ.11.56 மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், மண்டல மேலாளர் இந்தியன் வங்கி சாந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வெங்கடேசன், மகளிர் திட்ட அலுவலர் அரவிந்த், முதன்மை கல்வி அலுவலர் மகாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
